கோவில் சுவற்றில் துளையிட்டு உண்டியல் திருட்டு: மர்மநபர்களுக்கு வலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2023 01:08
சிறுபாக்கம்; சிறுபாக்கம் அருகே கோவில் சுவரில் துளையிட்டு உண்டியல் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுபாக்கம் அடுத்த பனையாந்தூர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடக்கும், நடப்பாண்டில் நடந்த திருவிழாவில், பனையாந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்து கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர், திரௌபதி அம்மன் கோவில் முன்புற இரும்பு கதவின் பூட்டை உடைக்க முயன்றனர். பூட்டை உடைக்க முடியாததால் கோவிலின் பின்புற சுவரில் துளையிட்டு சில்வர் உண்டியலை திருடினர். பின், உண்டியலில் இருந்த ரூ. 1 லட்சம் மற்றும் பக்தர்கள் காணிக்கை பொருட்களை எடுத்து கொண்டு, உண்டியலை அருகிலுள்ள ஏரிக்கரையில் மர்மநபர்கள் வீசி சென்றனர். தகவலறிந்து வந்த சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.