பதிவு செய்த நாள்
28
ஆக
2023
05:08
சூலூர்: காளியாபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த காளியாபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் பழமையானது. இங்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, 26 ம் தேதி மாலை, தீர்த்தக் குடம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதல், முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 8:00 மணிக்கு விமானத்துக்கும், 8:15 மணிக்கு ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம் முடிந்து அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருளாளர்கள் அருளுரை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.