ஆத்துார்; ஆத்துார் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி மோட்டூர் மாரியம்மன் கோவிலில், கடந்த, 20ல் சக்தி அழைத்தலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. 30 அடி உயர தேரை, ஏராளமான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக இழுத்து வந்தனர். மூலவர் மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல் ஆத்துார், கோட்டை, சம்போடை வன பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.