தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆவணி மூலத்தையொட்டி சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2023 05:08
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆவணி மூலத்தை முன்னிட்டு அம்பாள் இந்திய விமானத்தில் வீதியுலா நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக சனிபகவான் அருள்பாலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வருகின்றனர்.நேற்று முன்தினம் ஆவணி மூலத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா தடைபெற்றது. இதில் ஸ்ரீதர்ப்பரண்யேஸ்சரும் பிராணம்பிகையும் இந்திர விமானத்தில் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு மற்றும் விநாயகர்.முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.