பதிவு செய்த நாள்
29
ஆக
2023
04:08
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம், நாளை, 30ம் தேதி இரவு செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, மலையையே சிவனாக நினைத்து வழிபடும், அண்ணாமலையார் மலையை, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதில், ஆவணி மாத பவுர்ணமி திதி, நாளை, 30ம் தேதி காலை, 10:58 மணி முதல், மறுநாள், 31ம் தேதி காலை, 7:05 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி, சென்னையிலிருந்து, 50 பஸ்கள், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில், 50 பஸ்கள், வேலுார் மற்றும் ஆரணி மார்க்கத்தில், 50 பஸ்கள் என, 350 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.