பதிவு செய்த நாள்
30
ஆக
2023
01:08
பேரூர்; கோவையில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் அறக்கட்டளை சார்பில், நொய்யல் பெருவிழா கடந்த, 25ம் தேதி துவங்கியது. நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கலைஞர்களுடன் காவடி ஆடினார்.
நொய்யல் நதி மீட்பில் சிறுதுளி பங்கு குறித்த புத்தகத்தை அண்ணாமலை வெளியிட, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக்கொண்டார். அதன்பின், அண்ணாமலை பேசுகையில், கங்கை சிறப்பு திட்டம் போல தாமிரபரணி ஆறு, நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளித்திட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் இணைந்து நொய்யலை மீட்க வேண்டும், என்றார். நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், நொய்யல் பெருவிழா ஒருங்கிணைப்பாளர் வேதாந்தானந்தா சுவாமிகள், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.