மழைபெய்து விவசாயம் செழிக்க கஞ்சி கலயம் எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2023 04:08
கமுதி: கமுதி - பார்த்திபனூர் சாலை குண்டாறு பாலம் அருகே ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 1008 கஞ்சி கலையம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குருசக்தி தமிழ்செல்வி தலைமை வகித்தார்.கமுதியில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்கினிசட்டி, கஞ்சி கலையம், பால்குடம் எடுத்து பஸ்ஸ்டாண்ட், கண்ணார்பட்டி உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தனர். இந்தாண்டு மழை பெய்து விவசாயம் செழிக்க பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்பு உற்சவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆதிபராசக்தி வழிபட்டு மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.