மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2023 11:08
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்வ விழாவையொ ட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 63ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 10ம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்டதேரில் மணக்குள விநாயகர் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இன்று 31ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமிக்கு கடல் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 13ம் தேதி மதியம் 12 மணிக்கு 108 சங்காபிஷேகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் அறங்காவல் குழுவினர், தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.