பழநி: பழநி, முருகன் கோயிலில் அலைபேசி கொண்டு செல்வதை தடை செய்ய நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அலைபேசியை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு வெளியூர் பக்தர்கள் நவ பாசன சிலையை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கருவறையில் உள்ள மூலவர் சிலையை சிலர் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அலைபேசியை மலைக் கோயிலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தன் அடிப்படையில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அலைபேசியை கொண்டு செல்ல தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அலைபேசியை எடுத்து வந்தால் அவற்றை பாதுகாத்து வைக்க ’ரேக்’குகள் அமைக்கப்பட்டு பழநி பாத விநாயகர் கோயில், வின்ச், ரோப்கார் நிலையங்களில் அலைபேசிகளை பாதுகாத்து வைக்க இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இடங்கள் தேர்வு செய்யப்பட்ட பின் அதற்கான முறையான கட்டமைப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பணிகள் நடைபெற உள்ளது.