அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2023 11:09
பாலசமுத்திரம்: பழநி, பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழாவில் திருத்தேரோட்டம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆக.26., ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவில் செப்.1ல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது. தினமும் காலை 7:00 மணிக்கு சுவாமி சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இரவில் பவளக்கால் சப்பரம், கருட வாகனம், சேஷ வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். செப் 2ல் இரவு பாரிவேட்டை, நேற்று (செப்.3) காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பின் சுவாமி திருத்தேர் ஏற்றம் நடைபெற்றது. காலை 7:45 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு, பாலசமுத்திரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். செப் 4ல் கொடியிறக்குதல், செப். 5.,ல் விடையாற்றி உற்ஸவம் நடைபெற உள்ளது.