காளஹஸ்தியில் அஞ்சி அஞ்சி விநாயக சுவாமிக்கு சிறப்பு ஹோம பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2023 12:09
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி விநாயக சுவாமிக்கு கணபதி ஹோம பூஜை நடந்தது. இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு கலந்து கொண்டார். ஒவ்வொரு குடும்பத்தினரும் கணபதி ஹோமம் செய்து கொள்ளும் வகையில் தேவஸ்தானம் சார்பில் சங்கட ஹர சதுர்த்தசி அன்று கணபதி ஹோமம் ஆர்ஜித சேவையாக கொண்டு வரப்பட்டது. நேற்று நடைபெற்ற பூஜையில் கோவில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் தலைமையில், கலச ஸ்தாபன பூஜைகள் செய்யப்பட்டு முறைப்படி கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு கணபதி அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தூப தீப நெய் வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பூர்ண ஆரத்தி நடந்தது. இந்த கணபதி ஹோம பூஜையில் கோயில் நிர்வாக அதிகாரி சதீஷ் மாலிக், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ் வேத பண்டிதர்கள் சிவகுமார் சர்மா, கோவில் அர்ச்சகர்கள் சிவகுமார் சர்மா கோவிந்த சர்மா, கோயில் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.