சத்தமாகப் பேசுவது சிலரது இயல்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கூட அமைதியாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். சிலர் வேண்டுமென்றே பிறரை மட்டம் தட்டிப் பேசுவர். அது நாலு பேருக்கு கேட்க வேண்டும்; கைகொட்டி சிரிக்க வேண்டும் என்பதற்காக குரலை உயர்த்திப் பேசுவர். ஆனால் சத்தம் போட்டு பேசுபவர்களை இறைவனுக்குப் பிடிக்காது. ‘உரத்த குரலில் பேசும் மனிதனை இறைவன் வெறுக்கிறான். அமைதியாகவும், அடக்கமாகவும் பேசும் மனிதனை நேசிக்கிறான்’ என்கிறது குர்ஆன். பிறரது குறைகளை சுட்டிக் காட்ட விரும்பினால் தனியாக அழைத்து காதும் காதும் வைத்தது போல பேசுங்கள்.