இம்மை, மறுமை குறித்து தோழர்களிடம் அடிக்கடி பேசுவார். தோழர்களே... இம்மையில் ஆசைகளுக்கு பலியாகிவிடக்கூடாது. இன்பம் தேவையில்லை. ஆசைகளை குறையுங்கள். பிறகு பாருங்கள். உங்கள் முன்னேற்றத்தை. இறைவன் அறிவையும் தெளிவையும் புகட்டுவான். பள்ளிக்கூடம் செல்லாமலேயே அறிவொளி சுடர்விடும். இதயம் தெளிவாக இருக்கும். நன்மைக்கும் தீமைக்கும் இடையில் உள்ள வேற்றுமை தெளிவாகத் தெரியும். இது உங்களுக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு பயன்படக்கூடும். ஏனெனில் அந்த சமுதாயம் ஒழுங்கான அரசியல் நிர்வாகத்தைப் பெற்றிருக்காது. வாள் ஏந்தியவர்களும் சர்வாதிகாரிகளும் அரசர்கள் ஆவார்கள். நீதியும் நேர்மையும் குழி தோண்டிப் புதைக்கப்படும். ஏழைகளுக்கு உதவி செய்யமாட்டார்கள். தங்கள் பெருமை பேசுவதில் பொழுது போக்குவார்கள். கஞ்சத்தனம் உடையவர்களாக இருப்பார்கள்.