ஹாதீம் - பின்- தை என்பவர் வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார். சுயநலக் கூட்டம் ஒன்று அவரைப் பயன்படுத்த எண்ணியது. அவர் என்ன சொன்னாலும், செய்தாலும் வானாளவப் புகழ்ந்தது. இதை புரிந்து கொண்ட ஹாதீம், தம்முடைய காதுகள் கேட்கும் திறனை இழந்தது போல நடிக்கத் தொடங்கினார். அதன் பின் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அவரை அவதுாறாகப் பேசத் தயங்கவில்லை. இதனால் ஹாதீமுக்கு தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் புகழ்கிறார்களே என மகிழ்ச்சியடைவது நல்லதல்ல. நம் குறைகளை அறிந்து களைவதே முன்னேற்றத்திற்கான வழி.