வாழ்க்கைக்கான பாடத்தைக் ஒரு வரியில் கற்றுத்தருமாறு இளைஞர் ஒருவர் பெரியவரிடம் கேட்டார். அதற்கு அவரோ மணியை நினைத்து கொள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வாய் என்றார். நீங்கள் சொல்வது எதுவும் புரியவில்லை என்றார் இளைஞர். அப்போது மணியை மெல்ல அடித்தால் மெதுவாகவும், வேகமாக அடித்தால் வேகமாகவும், அடிக்காமல் விட்டால் ஓசையும் வராது. அதுபோலத்தான் உன்முயற்சியை பொறுத்தது வாழ்க்கை என்றார் பெரியவர். அப்போது தேவாலய மணியின் ஓசை இனிமையாக கேட்டது.