காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நடைபெற்ற கோகுலாஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2023 05:09
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நேற்று (8.9.2023) கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக நடைபெற்றது. சிவன் கோயில் கோ சாலையில் சாஸ்திர முறைப்படி பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பசுவை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டது போல் ஆகும். கோகுலாஷ்டமியையொட்டி, கோவிலின் சப்த கோகுலத்தில், மாடுகளுக்கு பாரம்பரிய முறைப்படி கோயில் வேதப் பண்டிதர்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பரத்வாஜ் தீர்த்தம் பகுதியில் உள்ள பிரதான கோசாலையில் உள்ள மாடுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோசாலையில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் கிருஷ்ணா ரெட்டி, சுரேஷ் ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணரின் அனுகிரகத்துடன் அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் பக்தர்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என காளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக.சீனிவாசுலு வாழ்த்து தெரிவித்தார்.