சதுரகிரியில் உண்டியல் திறப்பு ; ரூ. 44.8 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2023 03:09
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா முடிந்த நிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ 44.8 லட்சம் காணிக்கையாக வரப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 12 முதல் 17 வரை 6 நாட்களில் சுமார் 67 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்தனர். இந்நிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, நேற்று முன்தினமும், நேற்றும் (செப்.7 மற்றும் 8) எண்ணும் பணி, அறங்காவலர் ராஜா பெரியசாமி, திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வாளர் சடவர்ம பூபதி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள், திருக்கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ. 44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்க பணமும், 12 கிராம் தங்கமும், 200 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பட்டுள்ளது.