கோகுலாஷ்டமி முன்னிட்டு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2023 05:09
அவிநாசி; அவிநாசி ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு வழுக்கு மரம் மற்றும் உறியடி உற்சவத்தில் கோலாகலம்.
கொங்கு சிவஸ்தலங்களில் முதன்மையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 30 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில், அவிநாசியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் வழுக்கு மரம் ஏறினர். வழுக்கு மரத்தின் உச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பண முடிப்பாக ரூ 3001ம் மற்றும் பட்சணங்கள் அடங்கிய பையும் கட்டப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக உறியடி உற்சவம் நடைபெற்றது. அதில் ரூ.1001 பண முடிப்பை உறியை அடித்து வெற்றி பெறுபவர்களுக்காக வைக்கப்பட்டிருந்தது . இதனைத் தொடர்ந்து கரி வரதராஜ பெருமாள் உற்சவர் நான்கு ரத வீதிகளிலும் திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.