திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 11:09
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வருடாந்திர பிரமோற்சவம் வரும் செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று 12ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உட்பட அனைத்து இடங்களும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முழுதும் மூலிகை திரவியம் தெளிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு தொடங்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. திருமஞ்சன நிகழ்ச்சி முடிந்ததும் 11 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.