கூடலூர்: கூடலூர், சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை சிறப்பாக நடந்தது. காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி வழங்கினார். பக்தர்கள் விநாயகரை தரிசித்து சென்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.