இது ஒரு குன்று. ஆதி சங்கரா பகவத் பாதாள் காஷ்மீருக்கு வரும்போது இந்த குன்றில் தான் தியானித்தார். இந்த குன்றின் மேல் தான் சிவனுக்கு கோயில் அமைந்துள்ளது. இக்குன்றின் மேல் நின்று ஸ்ரீநகர் முழுவதையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. இந்த சங்கராசாரியா கோயிலை, ஜேஸ்டேஸ்வரா கோயில் என்றும் அழைப்பர். இது காஷ்மீரிலிருக்கும் ஸ்ரீநகரில் அமைந்துள்ளது. சங்கராசாரியா கோயில் சிவனுக்காக அமைத்து அவருக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோயில் ஸ்ரீநகரின் மத்தியில் அமைந்துள்ளது. சங்கராசாரியா கோயில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் குன்றில், 1100 அடி உயரத்தில் வெளிப்பரப்பளவில் மத்திய பகுதியின் குன்றில் அமைந்துள்ளது. இந்த கோயில் மன்னர் கோபடத்யாவால் கட்டப்பட்டது என்றும், இக்கோயிலுக்கு கோபடிரி என்று பெயர் சூட்டியதாகவும் நம்பப்படுகிறது. சனாதன தர்மத்திற்கு புத்துயிர் கொடுக்கும் போது ஸ்ரீ ஆதி சங்காராசாரியார் காஷ்மீரில் இங்கே தங்கியிருந்ததால், இந்த தலத்திற்கு சங்கராசாரியா மந்திர் என்று பெயராயிற்று. மற்றும் அந்த குன்றும் சங்கராசாரியா குன்று என்றழைக்கப்பட்டது. இந்த கோயில் மதம் என்கிற அடிப்படையில் மட்டுமின்றி சிற்பகலைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏறக்குறைய நூறு படிகள் கொண்ட இக்கோயிலை பெரிய எட்டுகோணத்திலிருக்கும் மேடை தாங்குகிறது. படிகளின் ஓரச்சுவற்றில் விலைமதிப்பற்ற கல்வெட்டுகள் அமையப்பட்டிருக்கிறது.