புரட்டாசி கார்த்திகை ; அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2023 10:10
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. செவ்வாய், கார்த்திகை ஒரே நாளில் வருவது மிக சிறப்பானதாகும். செவ்வாய்க்கு அதிபதியான முருகனை இன்று தரிசிப்பது சிறப்பு. முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும்.