திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் குறிஞ்சி பெருமுருக திருவிழா வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் குறிஞ்சி பெருமுருக விழா நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் துரியோதனன், ஒருங்கிணைப்பாளர்கள் வினோத், சசி, ராவணன், மனோஜ் மற்றும் நிர்வாகிகள் தேன், தினை மாவு, மா, பலா, வாழை மற்றும் 51 சீர்வரிசைகளுடன் பாரம்பரிய முறைப்படி காவடி ஆட்டம், சிலம்பாட்டத்துடன் சன்னதி தெரு வழியாக ஊர்வலமாக சென்று கோயிலில் வழிபட்டனர். தனியார் மண்டபத்தில் குறிஞ்சி பெருமுருகன், வள்ளி சிலைகள் வைத்து திருக்கல்யாண விழா நடந்தது. அர்ஜூனா விருது பெற்ற பாடிபில்டர் பாஸ்கரன், வள்ளி உருவ படத்தை திறந்து வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.