பதிவு செய்த நாள்
09
அக்
2023
12:10
களியக்காவிளை: செங்கல் சிவபார்வதி கோவிலில் உலக நன்மைக்காக பிரார்த்தனை மற்றும் தியான பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சி மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலகின் மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் வைகுண்டம் தேவலோகம் அமைக்கும் திருப்பணிகள் நடக்கிறது. மேலும் இங்கு வரும் பக்தர்கள் உலக நன்மைக்காக பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வதற்காக, தியான மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதிதியான மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். நெய்யாற்றின்கரை
பேரூராட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். அருவிபுரம் கோவில் மடாதிபதி பிரம்மஸ்ரீ சந்திரானந்த சுவாமிகள் துவக்கி வைத்தார். திருவனந்தபுரம் பிரம்மாகுமாரிஸ் நிறுவன இயக்குனர் ராஜயோகினி, மினி, முன்னாள் அமைச்சர் ஹாசன், ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார், கல்வி, சுகாதார நிலைக்குழு தலைவர் சலுஜா, பாறைசாலை பஞ்.,தலைவர் பென்ரவின், துணை தலைவர் அஜித்குமார், கவுன்சிலர் பிரவீன், அகில தந்திரி பிரசார சபை தேசியாபேசினர். ஸ்ரீராஜா கிஷன் போடி, டாக்டர்வி நாராயணராவ், சனல், ரஞ்சித்சந்திரன், பெரிங்கம்மாளா, கேசவன்குட்டி, ஜோஜி, வட்டவிளை விஜயன், உஷாகுமாரி, உதியங்குளங்கரை கோபாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், செங்கல் ராஜி, விஜயன் ஒளத்தண்ணி அனில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.