நிதி ஒதுக்கப்பட்டும் துவங்காத கோயில் மராமத்து பணி; பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2023 01:10
பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் தென் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையின் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசு ரூ. 74 லட்சம் மதிப்பில் இக்கோயில் பராமரிப்பு பணிகள் மற்றும் சுற்றுச்சுவர் மதில் விரிசலை சரி செய்து பாதுகாத்தல் போன்றபணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு அவை இந்துஅறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கோயில் தேருக்கு ஷெட் அமைப்பதற்காக எம்.எல்.ஏ., நிதியிலிருந்தும் ரூ.18 லட்சம் தனியாக ஒதுக்கப்பட்டது. இந்த 2 பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு சுமார் 6 மாதங்கள் கடந்த பின்னரும் அதற்கான பணிகள் துவங்காததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக ராமலிங்க சுவாமி கோயில் பராமரிப்பு பணிகள் மற்றும் தேர் ஷெட் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பணகுடி பக்தர்கள் பேரவை மற்றும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.