திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் பவித்ர உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2023 11:10
சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், மூன்று நாள் பவித்ர உற்சவம் துவங்கியது. உற்சவத்தை முன்னிட்டு, 9ம்தேதி அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடந்தது. பவித்ர உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரையிலும் யாகம் வளர்க்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆரத்தியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை 12ம் தேதி வரை பவித்ர உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.