முட்புதரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் ; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2023 12:10
திருச்சி: சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கும் அம்மனாக இருக்கும், இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில். இக்கோயிலில் உள்ள உண்டியல் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கோவில் உண்டியல் எவ்வாறு இங்கு வந்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.