விநாயகரோடு மிகவும் தொடர்புள்ளவர் மகரிஷியான அகத்தியர். காரணம் இரண்டு பேரும் தொப்பை வயிற்றுக்காரர்கள். அதோடு அகத்தியரை குறுமுனி என்றும், விநாயகரை ‘வாமன ரூப’ என்றும் அழைக்கிறார்கள். இதற்கு குள்ள உருவம் என்று அர்த்தம். இதை ஸ்லோகத்தின் மூலம் அறியலாம். வாமந-ரூப மஹேச்வர – புத்ர விக்ந – விநாயக பாத நமஸ்தே
இதைப்போல் ‘வக்ரதுண்ட, மஹாகாய’ என்ற ஸ்லோகம், விநாயகரை பெரிய சரீரமுடையவர் என்று குறிப்பிடுகிறது. அவ்வையார் தனது அகவலில் ‘அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்’ இருப்பவர் விநாயகர் என்கிறார். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். மிகச்சிறிய அணுவாக இருப்பவரும் அவரே. மிகப்பெரிய அகிலமும் அவரே.