பதிவு செய்த நாள்
16
அக்
2012
11:10
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நேற்று முதல் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கியது.கோவில்களில் அன்னதானம் வழங்குவதை நேற்று தமிழக முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். அதையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று முதல் அன்னதானம் வழங்குவது துவங்கியது. அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., பங்கேற்றார்.ஒன்றிய சேர்மன் ராஜசேகர், அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, அரசு வக்கீல் சீனுவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் மணி, ராயப்பன், மாவட்ட ஜெ.,பேரவை தலைவர் ஞானவேல், அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, எம். ஜி.ஆர்., இளைஞரணி பொருளாளர் குபேந்திரன், நகர துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகன், குட்டி, சுகன்யாமோகன், பொறியா ளர்கள் சீனுவாசன், மகேஸ்வரன், செந்தில், நகர பேரவை இணை செயலாளர் கோபி பங்கேற்றனர்.