Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ... ஏர்வாடி தர்கா கந்தூரி விழா கொடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2012
10:10

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும். இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு. காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும். பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம். தமிழ்நாட்டில் பவானி, உ.பி.யில் அலகாபாத், கர்நாடகாவில் திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.

63 கோடி தீர்த்தம்: இந்தியாவில் கங்கை உள்பட 63 கோடி தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில் காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது. துலா ஸ்நானத்திற்கு மிகவும் முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும், விஷ்ணுவாலய சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும். இந்த ஸ்நானத்திற்கு கடை முழுக்கு அல்லது முடவன் முழுக்கு என்று பெயர். பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட தலமாதலால் மாயூரம் என்று வடமொழியிலும், மயிலாடுதுறை என்று தமிழிலும் வழங்கப்படுகிறது. இத்தலம் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது. திருக்கடையூரில் சிவன் எமனை பதவியிலிருந்து நீக்கி விட்டார். அப்போது எமன் (தர்மதேவன்) மாயூரத்தில் உள்ள மாயூரநாதரை வழிபட்டு மீண்டும் அந்த பதவியை பெற்றான். எனவே இத்தலம் தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இடபத்தின் செருக்கு: ஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார். அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது. அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார். வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன். அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார். காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது. ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar