சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா; மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2023 04:10
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி திருவிழா 3ம் நாள் விழாவில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி வரும் விஜயதசமி வரை நவராத்திரி விழா நடக்கிறது. 3ம் நாளான இன்று, அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரிய அம்பா, ஸ்ரீ சாரா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச பிரியா அம்பா, ஆசிரம சகோதரிகள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.