இன்று துர்காஷ்டமி, திருவோண விரதம்; நரசிம்மதாரிணியை வழிபட நல்லதே நடக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2023 07:10
இன்று துர்காஷ்டமி. எதிரிக்கு கூட, கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமி. நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள். ஆம்...அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள். இன்று மாலையில் துர்கையாக பாவித்து அம்பிகையை வணங்கலாம். கோயில்களில் துர்கையை எலுமிச்சை தீபமேற்றி வழிபட துர்கையின் அருள் அரண்போல் காக்கும்.