திருப்பதி பிரம்மோற்சவம்; தங்க ரதத்தில் பவனி வந்த மலையப்பசுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2023 02:10
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி தேவியர் சமதேரராய் தங்கரதத்தில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
கடந்த 15 ம்தேதி துவங்கிய நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் உற்சவ மூர்த்தியான மலையப்பசுவாமி நாள்தோறும் விதம் விதமான அலங்காரத்தில் வலம் வந்தார். சுவாமி வலம் வரும்போது பல்வேறு மாநில கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். எட்டாம் நாளான இன்று தங்கரத பவனியைக்காண பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். நாளையுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது,நிறைவு நாளான நாளை சக்ரதீர்த்தம் நடைபெறுகிறது.சுவாமியின் அம்சமான ஸ்ரீசக்ரத்தை கோவிலின் புனித நீர்குளத்தில் நீராட்டுவர், அந்த நேரம் குளத்தை சுற்றிலும் கூடியிருக்கும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீராடுவர்.