சூலூர் வேங்கட நாத பெருமாள் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2023 11:10
சூலூர்: சூலூர் ஸ்ரீ வேங்கட நாத பெருமாள் கோவில் தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கட நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டு தோறும் விஜய தசமி அன்று தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 20 ம்தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் தேர் திருவிழா பூஜைகள் துவங்கின. 21 ம்தேதி கொடியேற்றமும், தேர் முகூர்த்தகால் பிடித்தல் நடந்தது. நேற்று முன்தினம் யாக சாலை பூஜையும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.. தொடர்ந்து, மதியம், 2:30 மணிக்கு பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் திரண்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் பவனி வந்தது. இன்று, பரிவேட்டை உற்சவமும், தெப்போற்சவமும் நடக்கிறது.