திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில், நாராயணீய பாராயணம், சுவாமி பவனி, கதகளி, சிறப்பு உற்சவபலி தரிசனம், கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம், சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடந்தது. விழா நிறைவு நாள் (23ம் தேதி) காலை திருவிளக்கு எழுந்தருளல், மாலை சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, இரவு கருட வாகனத்தில் சுவாமி பரளி ஆற்றுக்கு எழுந்தருளல், ஆராட்டு, நள்ளிரவு குசேல விருத்தம் கத களி ஆகியன நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.