ஸ்ரீவைகுண்டம் இரட்டை திருப்பதி பெருமாள் கோயிலில் கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2023 11:11
ஸ்ரீவைகுண்டம்; இரட்டை திருப்பதி பெருமாள் கோயிலில் கருடசேவை நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் தாமிரபரணியின் நதிக்கரையோரத்தில் ஆன்மிக சிறப்பு பெற்ற நவதிருப்பதி பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதிகளில் ஒன்றான இரட்டை திருப்பதி எனப்படும் தொலைவில்லிமங்கல அரவிந்தலோச்சனர் பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கருட சேவையை முன்னிட்டு நேற்று மாலை 4.30மணிக்கு சாயரட்சை பூஜையுடன் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து, செந்தாமரைக்கண்ணன் மற்றும் தேவர்பிரான் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.