திருப்புத்தூரில் பிரதோஷ வழிபாடு; மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2023 11:11
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஐப்பசி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் இன்று மாலை 4:30 மணிக்கு கொடிமரம் அருகில் நந்தி தேவருக்கும், மூலவர் சுவாமிக்கும் அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளை ரமேஷ் குருக்கள் செய்தார். தொடர்ந்து உற்ஸவ பிரதோஷ நாயகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனைக்கு பின் சுவாமி உட் பிரகாரங்களில் வலம் வந்து அருள்பாலித்தார்.