வாரணாசியில் தீபாவளி உற்சவம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2023 11:11
வாரணாசி: தீபாவளி உற்சவத்தையொட்டி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று வாரணாசி வந்தடைந்தார்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடமாநிலங்களில் விஜயயாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆந்திர , கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டார். கடந்த மாதம் நவாரத்திரியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி, அனுமன்காட் பகுதியில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் தங்கி தினமும் பக்தர்களை சந்தித்து அருளாசி வழங்கினார். தீபாவளியையொட்டி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசியில் தங்கியிருப்பார் என சங்கர மடத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி வந்த ஸ்ரீவிஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் லக்னோவில் உள்ள சங்கர மடத்தில் தங்கி பக்தர்களை சந்தித்து அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து அனுமன்காட் பகுதியில் தீபஒளி ஏற்றி அன்னபூர்ணஜெபம் மற்றும் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சிகளை நடத்தினார். தொடர்ந்து, வாரணாசி அனுமன்காட் ஸ்ரீசங்கர மடத்திற்கு இரவு 9:30 மணிக்கு திரும்பினார்.