பதிவு செய்த நாள்
11
நவ
2023
08:11
கூடலூர்: கூடலூர், புளியாம்பாறை ஆயிரம்வில்லி அம்மன் கோவிலில் நடந்த பூ புத்தேரி என்கிற அறுவடை திருவிழா பாரம்பரியம் மாறாமல் சிறப்புடன் நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், நெல் அறுவடைக்கு முன், மாண்டான்செட்டி மற்றும், பழங்குடி மக்கள் சார்பில், கடவுளக்கு நன்றி செலுத்தும் வகையில், பாரம்பரியமாக பூ புத்தரி என்கிற கதிர் அறுவடை திருவிழாவை, ஆண்டு தோறும், ஐப்பசி மாதம் 10 நாள் முதல் கிராமங்களில் கொண்டாடி, வருகின்றனர். நடப்பு ஆண்டும், இவ்விழாவின் துவக்கமாக, நம்பாலகோட்டை வேட்டைக்கொருமகன் சார்பில் புத்தூர்வயல் பகுதியில், 27ல் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, இவ்விழாவை பாரம்பரியமான கிராம கோவில்களில் கொண்டாடி வருகின்றனர்.. அதன்படி, புளியாம்பாறை ஆயிரம்வில்லி அம்மன கோவிலில் நேற்று, பூ புத்தரி எக்கிற கதிர் அறுவடை திருவிழா நடந்தது. காலை கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவிலில் இருந்து, செண்டை மேளம், பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் விவசாயில், ஊர்வலமாக கதிர் அறுவடை வயலுக்கு சென்றனர். நெற்கதிருக்கு பழங்குடியினர் பூஜை செய்து, கதிர் அறுவடை செய்து, அதனை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோவில் குருக்கள் நெற் கதிருக்கு அங்கு, சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.