பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி அமாவாசை வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 11:11
கோவை ; ஐப்பசி அமாவாசை தினத்தையொட்டி பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர், ஏழை எளியோருக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர். தொடர்ந்து, பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.