மூலம்: எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும். அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: முருகனை அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி மன அமைதி உண்டாகும். சந்திராஷ்டமம்: டிச.1, 2 அதிர்ஷ்ட தினம் நவ.24, 25
பூராடம்: எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த மாதம் உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை கள் குறையும். கணவன் மனைவிக்கி டையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும். பரிகாரம்: நவ.:கிரகத்தில் சுக்கிரனை வணங்க பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திராஷ்டமம்: டிச.2, 3 அதிர்ஷ்ட தினம் நவ.25, 26
உத்திராடம் - 1: திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான உங்களுக்கு இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றை யும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம். பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும். சந்திராஷ்டமம்: டிச.3, 4 அதிர்ஷ்ட தினம் நவ.26, 27
மேலும்
கார்த்திகை ராசி பலன் (16.11.2024 முதல் 15.12.2024 வரை) »