உத்திராடம் - 2, 3, 4: ஒரு காரியத்தை செய்யும் முன்பு யோசிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. பரிகாரம்: சூரியனை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும். சந்திராஷ்டமம்: டிச.3, 4 அதிர்ஷ்ட தினம் நவ.26, 27
திருவோணம்: அதிகார தோரணையுடன் காணப்படும் உங்களுக்கு இந்த மாதம் உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறு வீர்கள். கணவன்மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினருக்கு ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர் கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். பரிகாரம்: வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். சந்திராஷ்டமம்: டிச. 4 அதிர்ஷ்ட தினம் நவ.27, 28
அவிட்டம் - 1, 2: புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் உங்களுக்கு இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. சனி பகவான் எல்லா விஷயங்களிலும் அனுகூலத்தை தருவார். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படை யும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரவு திருப்தி கரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பரிகாரம்: நரசிம்மரை வழிபட காரிய வெற்றி உண்டாகும். சந்திராஷ்டமம்: டிச.5 அதிர்ஷ்ட தினம் நவ.28, 29
மேலும்
கார்த்திகை ராசி பலன் (16.11.2024 முதல் 15.12.2024 வரை) »