சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று (நவ. 16ல்) நடைபெற்றது. இதை தொடர்ந்து அன்று இரவு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருமணக் கோலத்தில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். கிராமத்தார்கள் முன்னிலையில் கோயில் சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.