மயிலாடுதுறை, திருக்கடையூர் கோயில் யானைகளை வனத்துறையினர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2023 10:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூர் கோவில்களின் யானைகளை மாவட்ட வனத்துறை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை மற்றும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி கோவில் நிர்வாகத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு யானைகளையும் இன்று மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது யானை பராமரிக்கப்படும் இடம், யானைக்கு வழங்கப்படும் உணவுகள், யானை தினசரி முறையாக நடைப்பயிற்சிக்கு கூட்டிச் செல்லப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை யானைப்பாகனிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் கதாநாயகன் மற்றும் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட உடன் இருந்தனர்.