வெற்றி தரும் செண்டாயுதம் ஏந்திய சாஸ்தா; இவரை வழிபட்டே கரிகாலன் பல மன்னர்களை வென்றார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2023 12:11
மோட்ச புரிகள் ஏழு. அவை அயோத்தி, ஹரித்துவார், காசி, உஜ்ஜயினி, மதுரா, துவாரகா, காஞ்சிபுரம். இவற்றில் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் புகழ் மிக்கது. இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் தர்மசாஸ்தா அருள்புரிகிறார். சோழ மன்னரான கரிகாலன் இந்த சாஸ்தாவை வழிபட்டு செண்டாயுதம் பெற்றார். அதன்பின் வடக்கு நோக்கி திக்விஜயம் சென்று பல மன்னர்களை வென்றார். இறுதியாக இமயமலையில் சோழர்களின் புலிச்சின்னத்தைப் பொறித்தார். சிலப்பதிகாரம், இந்திர விழா எடுத்த காதையின் அடியாருக்கு நல்லார் உரையில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. கச்சி வளைக் கச்சி காமக்கோட்டம் காவல் மெச்சி இனிது இருக்கும் மெய்ச் சாத்தன் -கம்பக் களிற்றுக் கரிகால் பெருவளத்தான் செம்பொற் கிரி திரித்த செண்டு. கைச் செண்டு காஞ்சிபுரம் நகரின் காவல் தெய்வமாக விளங்கும் இந்த சாஸ்தாவை தரிசித்தால் எதிரி தொல்லை மறையும். வெற்றி கிடைக்கும். காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,