Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பக்தர்களுக்காக எருமேலியில் சபரிமலை ... சாட்டை ஏந்திய சாஸ்தா; ஒருமுறை தரிசித்தாலும் முன்வினைப் பாவம் பறந்தோடும் சாட்டை ஏந்திய சாஸ்தா; ஒருமுறை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பாதுகாப்பில் இரண்டாம் கட்டமாக 1450 போலீசார்; ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை பாதுகாப்பில் இரண்டாம் கட்டமாக 1450 போலீசார்; ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

29 நவ
2023
10:11

சபரிமலை; சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம் கட்டமாக1450 போலீசார் நேற்று பொறுப்பேற்றனர். போலீஸின் உதவி பெற இலவச ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ., 15 முதல் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் முதற்கட்ட பணி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து அவர்கள் ஊர் திரும்பினார். இரண்டாம் கட்டமாக 10 டி.எஸ்.பி., 32 இன்ஸ்பெக்டர், 125 எஸ். ஐ. 1281 போலீசார் என 1450 பேர் நேற்று சன்னிதானத்தில் பொறுப்பேற்றனர்.

சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பணி விளக்க கூட்டத்தில் எஸ். பி., கோபாலகிருஷ்ணன் பேசுகையில், பக்தர்கள் சிறந்த முறையில் தரிசனம் நடத்தவும், ஒவ்வொரு பக்தரும் ஐயப்பனை தரிசித்ததை உறுதி செய்ய வேண்டியதும் போலீசின் கடமை என்று குறிப்பிட்டார். வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் என்பதால் போலீசார் பொறுமையுடன் மிகுந்த நிதானமாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பக்தர்களுக்கு உதவுவதற்காக போலீஸ் ஹெல்ப்லைன் எண் 14432 அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த எண்ணில் அழைத்தால் பம்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து தகவல்களும் கிடைக்கும்.விருச்சுவல் கியூ, பார்க்கிங், கூட்டம், பூஜைவிபரங்கள், விபத்துக்கள்,கூட்டம் பிரிந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த விவரங்களை பெற முடியும்.

12 விளக்கு: கார்த்திகை 12 தேதியை கேரளாவில் 12 விளக்கு என்று அழைக்கின்றனர். இந்த நாளில் கேரளாவில் உள்ள கோயில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். 12 விளக்குக்கு பிறகு தான் சபரிமலைக்கு ஏராளமான கேரள பக்தர்கள் வருகை தருகின்றனர். சபரிமலையில் நேற்று 12 விளக்குக்காக சன்னிதானத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு பக்தர்கள் சரண கோஷம் முழக்கினர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar