Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னமனூரில் ஐயப்பனுக்கு 10 நாட்கள் ... பாகிஸ்தானில் காபி கடை வைக்க யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்து கோயில்கள் இடிப்பு! பாகிஸ்தானில் காபி கடை வைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்கள் பயிற்சி மையங்கள் அல்ல! திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர் பயிற்சிக்கு ஐகோர்ட் தடை
எழுத்தின் அளவு:
கோயில்கள் பயிற்சி மையங்கள் அல்ல! திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர் பயிற்சிக்கு ஐகோர்ட் தடை

பதிவு செய்த நாள்

30 நவ
2023
12:11

மதுரை; ‘உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ், பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களை திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நியமித்து, மூத்த அர்ச்சகரின் கீழ் பயிற்சியளிக்கக் கூடாது’ என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சுதந்திர பரிபாலன ஸ்தலஸ்தர்கள் சபா தலைவர் வீரபாகு மூர்த்தி, இணைச் செயலர் ஹரிஹரசுப்பிரமணயன் தாக்கல் செய்த மனு:  தமிழக அரசின், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் மூலம் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களை, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூத்த அர்ச்சகர்களின் கீழ் பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்க, அறநிலையத்துறை சார்பில், ஆக., 28ல் அரசாணை வெளியானது. இது, சட்டவிரோதமானது.

இடைக்கால தடை; ஏற்கனவே ஆகமங்களை பயின்ற திரிசுதந்திரர்கள் உள்ளனர். எனவே, புதிதாக அர்ச்சகர்கள் நியமனம் தேவையற்றது. அரசின் ஓராண்டு பயிற்சி மூலம், வேதத்தை முழுமையாக கற்க முடியாது. வேதங்களை முழுமையாக கற்க, ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாகும். மூத்த அர்ச்சகரின் கீழ் ஓராண்டுக்கு பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் நபர்களுக்கு, கோவில் நிதியிலிருந்து மாதம், 8,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல. அறநிலையத் துறையின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுக்களை நீதிபதிஎஸ்.ஸ்ரீமதிவிசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆகம கோவில்களில் பயிற்சி பெற இவர்களுக்கு தகுதியில்லை என்பதில் மட்டுமே மனுதாரர் தரப்பு ஆட்சேபிக்கிறது. பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றத்தில் தனியார் ஆகமபயிற்சி மையங்கள் கூட கோவிலுக்குள் பயிற்சி நடத்தவில்லை. மூத்த அர்ச்சகரின் கீழ் கோவிலுக்குள் பயிற்சி அளிப்பது ஆகமங்களுக்கு எதிரானது. கோவில்களை பயிற்சி மையங்களாகவோ, ஆய்வுக் கூடங்களாகவோ கருத முடியாது. ஓராண்டுஅர்ச்சகர் படிப்பை முடித்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அர்ச்சகர் பயிற்சி வகுப்பின் முதல் நாளிலிருந்து குறிப்பிட்ட ஆகமத்தில் பயிற்சி பெற வேண்டும். ஒருஆகமத்திலிருந்து மற்றொரு ஆகமத்திற்கு மாற முடியாது. எந்த ஆகமத்தின் கீழ் பயிற்சி பெற்றனர் என்பதை குறிப்பிடாமல், மூத்த அர்ச்சகரின் கீழ் பயிற்சி பெற, கோவிலில் பணியமர்த்துவது அறநிலையத்துறையின், 2007ம் ஆண்டைய அரசாணைக்கு எதிரானது.

வழக்கு பைசல்; பயிற்சி என்ற போர்வையில் பணி நியமன உத்தரவுகளை ஆகமவிதிகளுக்கு புறம்பாக அறநிலையத்துறை வழங்கியுள்ளது. இது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அறநிலையத்துறையின் உத்தரவிற்கு இடைக்கால தடை  விதித்துள்ளது. அந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுப்படி செயல்பட இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. அதுவரை அரசாணைப்படி எவ்வித பயிற்சியும் அறநிலையத்துறை அளிக்கக் கூடாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar