பதிவு செய்த நாள்
05
டிச
2023
11:12
ஒருமுறை தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தேரில் புறப்பட்டார். அப்போது அவரது தேரின் அச்சு முறிந்தது. அந்த இடம்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம். இதை அடுத்த ஊர்தான் மதுரா வெங்கடேசபுரம். இங்கு பூர்ணா, புஷ்கலாவுட ஐயனாரப்பன் சாஸ்தா கோயில் கொண்டுள்ளார். கலியுக வரதனாகவும், கண்கண்ட தெய்வமாகவும். தன்னை நாடுவோரின் துயர் போக்குபவராகவும், காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் இவர் உள்ளார். முன்பு அய்யனாருக்கு கற்சிலை அமைத்து வழிபட்டனர். பின்பு அது சிதலமடையவே பிடிமண் எடுத்து கோயில் கட்டப்பட்டு மீண்டும் வழிபடத் தொடங்கினர். அண்ணன்மார், சப்த கன்னியர் சன்னதியும், குதிரை, யானை வாகனங்களும் பிரகாரத்தில் உள்ளன. பனை, வேப்ப மரம் தலவிருட்சமாக உள்ளன. ஆடி மூன்றாம் திங்களன்று திருவிழா நடக்கிறது.
செங்கல்பட்டில் இருந்து கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை வழியாக 29 கி.மீ.,
நேரம்: காலை 6:00- 10:00மணி, மாலை 5:00 - 8:00மணி
தொடர்புக்கு: 95007 84685, 89403 10345