பதிவு செய்த நாள்
15
டிச
2023
12:12
அன்னூர்; அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். இதையடுத்து விஸ்வக்சேனா பூஜை நடந்தது. நேற்று முன்தினம் கலசங்கள் நிறுவுதல், இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பங்கேற்றார், நேற்று அதிகாலையில் புனித நீர் அடங்கிய குடங்கள் யாகசாலையை வலம் வந்து கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 7 50 மணிக்கு மூலவர், விமானங்கள், சக்கரத்தாழ்வார், முன் தோரண வாயில், ராமானுஜர் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னூர், கோவை, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் இருந்து பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். கே.ஜி. நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, திருப்பணி கமிட்டி தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து தச தரிசனம் நடந்தது. 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.