ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல் பத்து ஒன்பதாம் நாள்; முத்தங்கி அணிந்து நம்பெருமாள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2023 09:12
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பகல் பத்து உற்சவத்தின் ஒன்பதாம் நாளில், நம்பெருமாள் அரையர் சேவை முத்துக்குறி நாளின் அபிநய ஏற்றத்திற்கு ஏற்ப , முத்து கபாய் அணிந்து , முத்து நேர் கிரீடம் (சப்தாவரணத்தில் அணிவது) பங்குனி உத்திர பதக்கம், தாயார் பதக்கம், ரங்கூன் அட்டிகை, முத்து அபய ஹஸ்தம், முத்து கர்ண பத்ரம், முத்து திருவடி, 2 வட முத்து மாலை அணிந்து, பின் சேவையில் - முத்தங்கி அணிந்து சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.